சட்டவிரோத சூதாட்ட கும்பலால் தாக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்; நேரில் நலம் விசாரித்த வேலுமணி

By Velmurugan s  |  First Published Jun 7, 2023, 8:02 PM IST

கத்திக்குத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் அபுபக்கரை முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 


கோவை குணியமுத்தூர் காளவாய் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலராக இருந்து வந்தார். மேலும் காளவாய் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோத  சூதாட்டம் நடைபெற்று வருவதை காவல்துறையினருக்கு அபூபக்கர் தகவல் அளித்து வருவதாக கூறி கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு என்ற ஜலில் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கோவை ஆத்துப்பாலம் காளவாய் பகுதியில் வைத்து அபூபக்கரை கத்தியால் குத்தியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அபுபக்கர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். 

Tap to resize

Latest Videos

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்னும் பல ரயில் விபத்துகளுக்கு வாய்ப்பு - எச்.ராஜா எச்சரிக்கை

மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிதி உதவியும், பழங்களும் வழங்கி ஆருதல் தெரிவித்தார். மேலும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் அபுபக்கருக்கு அளித்துவரும்  சிகிச்சைகள் பற்றி கேட்டரிந்தார். அந்த வார்டில் பல்வேறு உபாதைகளால் உடல் நலக்குறைவுடன் சிகிச்சையில் இருந்தவர்களுடன் கனிவுடன் குறைகளை கேட்டறிந்ததுடன் மருத்துவர்களிடமும் அவர்களின் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னாள் அமைச்சரும், அதிமுக  தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் இந்த செயல்பாட்டால் சிகிச்சைபெற்று வருபவர்கள்  மகிழ்ச்சி பெருமிதத்துடன் நன்றி தெரிவித்தனர்.

click me!