நட்ட நடு சாலையில் அரை நிர்வானத்துடன் வாகனங்களை மறித்து அட்டகாசம்! போதை இளைஞரால் பரபரப்பு!

Published : Jun 07, 2023, 10:32 AM IST
நட்ட நடு சாலையில் அரை நிர்வானத்துடன் வாகனங்களை மறித்து அட்டகாசம்! போதை இளைஞரால் பரபரப்பு!

சுருக்கம்

பொள்ளாச்சியில், மது போதையில் அரை நிர்வானத்துடன் வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த போதை இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவை சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு திடீரென தலையில் ரத்த காயத்துடன், உடல் முழுவதும் ரத்தக்கரை படிந்த நிலையில் அரை நிர்வானத்துடன் வந்த போதை ஆசாமி சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை வழிமறித்தும், வாகன ஓட்டிகளுக்கும் மிரட்டல் விடுத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது

பின்னர் அந்த போதை ஆசாமி அங்கிருந்து நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை வெளியில் செல்லுமாறு கூறினார்.

ஆனால் அந்த போதை ஆசாமி ஊழியர்களை மிரட்டி நான் நீதிபதி அம்மாவை பார்க்க வேண்டும் வெளியில் வரச் சொல்லுங்கள் என்று மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நீதிபதியை பரக்க வேண்டும் எனக் கூறி ரகளையில் ஈடுபட்டார். அங்கு வந்த காவல் துறையினருக்கும் மிரட்டல் விடுத்தார். ஒரு வழியாக போலீசார் அவரை வெளிழே அழைந்த்து வந்தனர்.



பின்னர், அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி வயது 22 என்பதும் தனக்குத்தானே பாட்டிலால் தலையை காயத்தை ஏற்படுத்தியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?