கோவையில் கணவரின் நினைவாக அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டி கொடுத்த பெண்

By Velmurugan s  |  First Published Jun 5, 2023, 7:49 PM IST

கோவை மாவட்டம் சூலூர் அருகே உயிரிழந்த தனது கணவனின் நினைவாக அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டி கொடுத்த பெண்ணின் செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் உயிரிழந்துவிட்டார். இவருக்கு மணிமுத்து என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.  திடீரென கணவன் இறந்த நிலையில் மணிமுத்து அவர் நிர்வகித்து வந்த கட்டுமான தொழில் நிறுவனத்தை முன் நின்று நடத்தி வருகிறார். 

Latest Videos

இந்நிலையில் பட்டணம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி கட்டிடம் இல்லாமல், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு தனது கணவன் நினைவாக மணிமண்டபம் கட்டாமல் வகுப்பறை, கட்டிக் கொடுக்கலாம் என நினைத்த மணிமுத்து தனது சொந்த செலவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார்.

அரசு விழாவில் சுவர் ஏறி குதித்து சென்ற எம்எல்ஏ; முதல்வர் முன்னிலையில் ஆவேசமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி கட்டிடமாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.  இதனை மணிமுத்து ரிப்பன் வெட்டி பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். உடன் பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், பீடம் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் குமாரவேலு மற்றும் திமுக இலக்கிய அணி செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்வில் பாயாசம் சரியில்லாததால் மணமகன், மணமகள் வீட்டார் இடையே பயங்கர மோதல்
 

click me!