போதை ஆசாமிகளிடம் தனியாக சிக்கிய பெண் எஸ்ஐ ஐ வறுத்தெடுத்த மது பிரியர்கள் வைரல் வீடியோ

Published : Jun 21, 2023, 08:40 AM IST
போதை ஆசாமிகளிடம் தனியாக சிக்கிய பெண் எஸ்ஐ ஐ வறுத்தெடுத்த மது பிரியர்கள் வைரல் வீடியோ

சுருக்கம்

மதுபோதையில் பெண் உதவி ஆய்வாளரிடம் வம்பிழுத்து தகராறு செய்த 2 போதை ஆசாமிகளை கைது செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து தனது மகனை அழைத்துக் கொண்டு இடையர்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த குடிபோதை வாலிபர்கள் சங்கரிடம் தகராறு செய்துள்ளனர். 

மேலும் தகராறில் ஈடுபட்ட சங்கரின் வாகனத்தை அடித்து உடைத்து பாறாங்கல்லை தூக்கிப்போட்டு தீ வைத்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாநகர காவல் பிரிவில் பணியாற்றும் சங்கரின் உறவினரான பெண் உதவி ஆய்வாளர் கோமதி என்பவர் அவசர அவசரமாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். 

பாஜகவின் பி டீம் நான் அல்ல; என்னுடைய மறு உருவம் தான் பாஜக - சீமான் விளாசல்

அங்கு வந்து போதை ஆசாமிகளிடம் ஏன் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரிடமும் போதை ஆசாமிகள் தரக்குறைவாக பேசி தொந்தரவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொன் கார்த்திகேயன் மற்றும்  பொன்னுச்சாமி ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் தலைமறைவான ரமேஷ் பாபுவை தேடி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?