6 வருடங்களாக பணத்தை தராமல் இழுத்தடிக்கும் அதிமுக பிரமுகர்; ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தர்ணா

By Velmurugan s  |  First Published Jun 19, 2023, 6:08 PM IST

கோவையில் 6 வருடங்களுக்கு முன்பு விற்கப்பட்ட சொத்துக்கு தற்போது வரை முழுமையாக பணம் வழங்காமல் ஏமாற்றும் அதிமுக பிரமுகரிடம் இருந்து பணத்தை பெற்றுதரக்கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.


கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் இன்று அவரது மாற்றுத்திறனாளி மகன், உட்பட இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தீடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில் தனது தாயார் சொத்தை கடந்த 6 வருடங்களுக்கு முன் அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜ் என்பவருக்கு விற்றதாகவும்,  

விற்பனை செய்த பணத்தில்  குறிப்பிட்ட தொகையை மட்டும் தனக்கும், சகோதர, சகோதரிக்கும் கொடுத்து விட்டு மீதமுள்ள 50,000 ரூபாயை புனிதா நாகராஜ் தராமல் இருப்பதாகவும், தற்போது தனது தாயார் இறந்த நிலையில், மீதமுள்ள பணம் குறித்து கேட்டால் தன்னை இழிவாக பேசுவதாகவும் பணத்தை தராமல் இழுத்தடிப்பதாக தெரிவித்தார். 

Latest Videos

undefined

ஸ்டாலின் ராகுல் காந்தியை ஆதரிப்பதால் பாஜக திமுகவை எதிர்க்கிறது - அழகிரி குற்றச்சாட்டு

மேலும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி அதிமுகவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் இருக்கும் வீட்டை காலி செய்ய வைப்பதாகவும் எங்கு சென்றாலும் தங்களை பற்றி குற்றம் கூறி அவப்பெயரை உண்டாக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் தங்கள் மீது புகார் தெரிவித்து தன்னை கைது செய்ய முயன்றதாக தெரிவித்தார். 

திருவண்ணாமலையில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

எனவே தானும் குடும்பத்தினரும் என்ன செய்வதென்றே தெரியாமல் நிர்கதையாய் நிற்பதாகவும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜிடம் இருந்து பெற்று தர வேண்டுமென கேட்டுக் கொண்டார். தர்ணாவில் ஈடுப்பட்ட அவர்களிடம் போலிசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

click me!