கோவையில் வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த போலி மருத்துவர் கைது

By Velmurugan s  |  First Published Jun 20, 2023, 11:44 AM IST

கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக்கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ்  என்பவர் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 


கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தலையோலப்பறம்பு காவல் நிலையத்தில் எர்வின் எவின்ஸ் மீது  உள்ள வழக்கு தொடர்பாக கேரள காவல் துறையினர் அவரை திருப்பூரில் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கேரள காவல் துறையினர் அளித்த தகவலின் பெயரில் எர்வின் எவின்ஸ் தங்கி இருந்த வீட்டை கோவை போத்தனூர் காவல் துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் அவரது வீட்டில் ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், போலி தங்க பிஸ்கட், ரப்பர் ஸ்டாம்ப், ஏர் கன் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் போத்தனூர் போலீசாரால் பறிமுதல் செய்தனர்.

Latest Videos

undefined

Crime: தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகன் ஓட ஓட வெட்டி கொலை; கள்ளக்காதலன் வெறிச்செயல்

மேலும் போலி தங்க கட்டி, போலி ரூபாய் நோட்டுகள் போன்றவை வீட்டில் இருந்ததால் வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் புகாரை பெற்று எர்வின் எவின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!