சூரிய கிரகணம் மூடநம்பிக்கை… விழிப்புணர்வு ஏற்படுத்த திராவிட அமைப்புகள் செய்த காரியம் என்ன தெரியுமா?

By Narendran SFirst Published Oct 25, 2022, 10:53 PM IST
Highlights

சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அசைவம் சமைத்து உண்டு மகிழ்ந்தனர். 

சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அசைவம் சமைத்து உண்டு மகிழ்ந்தனர். இந்தியாவில் சூரிய கிரகணம் இன்று மாலை 5.11 மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழ்ந்துள்ளது. இதை அடுத்து கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது என்றும் கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே சூர்ய கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றெல்லாம் கூறுவது வழக்கம்.

இதையும் படிங்க: விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்குகள்… திரும்பி அதே நாட்டிற்கு அனுப்பி வைத்த சுங்கத்துறை!!

சூர்ய கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற மூட நம்பிக்கையை முறியடிக்கும் வகையில்,  கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கிரகண நேரத்தில் கோழிக்கறி குழம்பு செய்து சாப்பிட்டனர். மேலும் சூரிய கிரகணத்தின் போது, பொது மக்களுக்கு பல்வேறு விதமான அச்சங்களும் மூடநம்பிக்கைகளும் உள்ளதாக திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள்  விமர்சித்தன.

இதையும் படிங்க: அமைச்சர் வீட்டருகே தீப்பற்றிய கார்... கோவையை தொடர்ந்து குமரியிலும் உச்சக்கட்ட பரபரப்பு!!

மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், கூறிய அவர்கள், பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சப்பட வேண்டாம் என்றும் திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தின. முன்னதாக சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோழி குழம்பு மற்றும் சோறு சமைத்து நல்லிசெட்டிபாளையம் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி உண்டு மகிழ்ந்தனர். 

click me!