கோவையில் மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை... விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்!!

By Narendran S  |  First Published Oct 25, 2022, 7:20 PM IST

கோவையில் மலைப்பகுதியில் இருந்து வெளியேரிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளது.


கோவையில் மலைப்பகுதியில் இருந்து வெளியேரிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து சேதம்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி மலைப்பகுதிகளுக்கு அனுப்பி விட்டாலும், யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மலைப்பகுதியில் இருந்து யானை கூட்டம் வெளியேறியது.

இதையும் படிங்க: வெடி பொருள் என்று தெரிந்தே உதவி செய்துள்ளனர்..! 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது- காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

Latest Videos

undefined

இந்த யானை கூட்டம் இரவு 11 மணி அளவில் விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது. 2 குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் பழனிசாமி என்பவரின் தொட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த சுரைக்காய் செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. அதை தொடர்ந்து அருகிலுள்ள இளங்கோவன் என்பவரின் தோடத்தில் புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த 25 தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. அதுமட்டுமில்லாமல் கனகராஜ் என்பவரது தோட்டத்தில் 16 தென்னை மரங்கள், வெள்ளிங்கிரி தோட்டத்தில் ஐந்து தென்னை மரங்களை சாய்த்து தள்ளியது.

இதையும் படிங்க: வன மரபியல் நிறுவனத்தில் வேலை!! 10ம் வகுப்பு படித்தாலே போதும் - எவ்வாறு விண்ணப்பிப்பது ? முழு விபரம்

மேலும் அருகில் இருந்த சிடிசி துறை என்பவரின் தோட்டத்தில் உள்ள கேட்டின் மதுல் சுவரை இடித்து தள்ளி மஞ்சள் மூட்டைகளை சூறையாடியது. இதை அடுத்து யானைகள் சேதப்படுத்திய பகுதிகளை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

click me!