கோவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கோவை திமுக வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பதாக கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!
அந்த சர்ச்சைக்குரிய போஸ்டரில்,ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை. 2020 முதல் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், நிறைவேற்றப்படாத 21 சட்ட மசோதாக்கள் குறித்து பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது. திமுகவினரின் இந்த செயல் பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க..தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.. போராட்டத்தில் குதித்த பாஜக - அண்ணாமலை அறிவிப்பு !