ட்ரெண்டிங்கில் இணையவழி குற்றங்கள்..மக்களே உஷார்.! தப்பிப்பது எப்படி ? எச்சரித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு

By Raghupati RFirst Published Dec 10, 2022, 10:47 PM IST
Highlights

தமிழகத்தை பொருத்தவரை குற்றங்கள் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.ஜி.பி சைலேந்திரபாபு வருகை தந்தார். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு,  கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் கொலை வழக்குகள், ஆதாய கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கு, தங்க கடத்தல் வழக்குகளில் கோவை காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. கோவையில் மூன்று புதிய காவல் நிலையங்கள் துவங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க..மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!

சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் மூன்று காவல் நிலையங்கள் அமைய உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,  தமிழகத்தை பொருத்தவரை குற்றங்கள் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1597 கொலைக் குற்றங்கள் நடைபெற்றது. இந்தாண்டு 1368 கொலைக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பீடு கையில் இந்த ஆண்டு 15 சதவீதம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது.

கேரளாவில் இருந்து வரக்கூடிய பயோ கழிவுகளை தடுப்பதற்கும் ஆறு இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அறிவித்த முக்கிய டோல்கேட்டுகளில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் தயார் நிலையில் உள்ளது. இணைய வழி குற்றங்களாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தற்போது வரை தமிழகத்தில் 45 ஆயிரம் என பதிவாகியுள்ளது.

படித்தவர்கள் கூட இணைய வழி குற்றங்களில் அதிகம் சிக்குகிறார்கள். அலைபேசி வாயிலாக வங்கி விவரங்களை பொதுமக்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். இணைய வழி குற்றங்களை குறைப்பதற்கு காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று பேசினார்.

இதையும் படிங்க..தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.. போராட்டத்தில் குதித்த பாஜக - அண்ணாமலை அறிவிப்பு !

click me!