நாடாளுமன்றத்தில் அண்ணா, மாறன் போல செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

By SG Balan  |  First Published Jun 15, 2024, 8:33 PM IST

திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா, முரசொலி மாறன் போல செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா, ஈவிகே சம்பத், முரசொலி மாறன் போல செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் இன்று திமுக கூட்டணி சார்பில் மும்பெரும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று வெற்றி என்று குறிப்பிட்டார். "8 முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து முடித்துவிட்டார். அன்று ராகுல் காந்தி வழங்கிய இனிப்பு, கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிவிட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.

பாஜக.வுக்கு ஆதரவான நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கவே நீட் கொண்டுவரப்பட்டது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

"பாஜக தனித்து அரசமைக்க முடியாமல் செய்திருப்பது இந்தியா கூட்டணியின் வெற்றி. பாஜக 240 தொகுதிகளை மட்டுமே வென்றிருப்பது மோடியின் தோல்வி. பாஜக தான் நினைத்தை எல்லாம் நிறைவேற்ற முடியாது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு இருவரின் கூட்டணி இல்லாவிட்டால் மோடி பிரதமராக இருக்க முடியாது. 

"40 எம்.பி.க்களும் நாடாளுமன்ற கேன்டீனில் வடை சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள். வாயால் வடை சுடுவது எல்லாம் உங்கள் வேலை; திமுக கூட்டணியின் 40 எம்.பி.க்களும் தங்கள் கருத்துகளால் உங்கள் ஆணவங்களைச் சுடுவார்கள்" எனவும் அவர் கூறினார்.

"40 எம்.பி.க்களும் தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் உரத்துப் பேச வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதைத் தடுக்கும் அரணாக செயல்பட வேண்டும். அறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத், முரசொலி மாறன் போன்ற தலைவர்களின் வழியில் மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்" எனவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

2026 சட்டமன்றத் தேர்தல் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த முறை அதிமுக வென்ற இடங்களிலும் திமுக வெற்றி பெறும் எனவும் திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.

இரண்டே நாளில் சாகடிக்கும் அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா! ஜப்பானில் பரவுவதாகத் தகவல்!

click me!