கோவையில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு ஓடிய ஆட்சியர், ஆணையாளர்

By Velmurugan s  |  First Published Oct 7, 2023, 10:29 AM IST

கோவையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர்.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், பொது மக்களிடையே உடல் தகுதி கலாசாரத்தை புதுப்பிக்கும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோவையில் இன்றைய தினம் நடத்தப்பட்டது. 

Tap to resize

Latest Videos

நேரு ஸ்டேடியம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் துவங்கிய இப்போட்டி எல்ஐசி அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடையுமாறு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி, மாடு ரயில் மோதி உயிரிழப்பு

இப்போட்டி 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் என நடத்தப்பட்டது. மேலும் இப்போட்டியில் முதல் பரிசாக 5000 ரூபாய், இரண்டாம்  பரிசாக 3000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய், நான்கு முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

ஓட்டப்போட்டியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் போட்டியாளர்களுடன் இணைந்து ஓடினர்.

click me!