தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை ஒரு நாள் தலைமை ஆசிரியராக்கி ஊக்கப்படுத்தும் அரசு பள்ளி

By Velmurugan s  |  First Published Oct 6, 2023, 8:29 PM IST

பொள்ளாச்சி அருகே காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை ஒரு நாள் தலைமை ஆசிரியராக்கி மாணவர்களை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 276 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும், இரண்டாவது மதிப்பெண் பெரும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் பள்ளி மாணவர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்திருந்தார்.

Latest Videos

undefined

இந்நிலையில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷன் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜ் இருவரையும் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்ததோடு முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷனுக்கு சால்வை அணிவித்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜையும் உதவி தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து இன்று ஒரு நாள் மட்டும் பொறுப்புகளை இரு மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுகுறித்து ஒரு நாள் தலைமை ஆசிரியரான தர்ஷன் கூறுகையில் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே கல்வி ஆர்வத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் கூறியது, எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இதனால் நன்றாக படித்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். அதனால் எனக்கு இன்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற அரசு பள்ளிகளிலும் நடந்தால் எங்களைப் போன்ற மாணவர்களிடையே மேலும் கல்வியை கற்க ஆர்வமும், ஊக்கமும் ஏற்படும் என மாணவர் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனையும், அவரது கட்சியையும் நாங்கள் பொருட்படுத்தியதே கிடையாது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதேபோல் பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றதை விட நடப்பாண்டில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என ஊக்கத்தை அளித்து கல்வியை கற்பித்து வருகிறோம். மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியை கற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

click me!