கோவையில் ஒரே நாளில் 3,749 கோடி கடன் வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

By Velmurugan s  |  First Published Oct 3, 2023, 5:54 PM IST

கோவையில் பிரதம அமைச்சரின் கடன் திட்டத்தின் கீழ் ரூ.3,749 கோடி கடன் தொகையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.


கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற மாபெரும் கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய மத்திய அவர், "வங்கிகள் மூலமாக மானியம் எந்த கடனுக்கு உள்ளதோ அந்த மானியம் அந்தப் பயனாளிகளுக்கு சென்று சேருகிறதா என்ற முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதனை புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், நாகாலாந்து ஆகிய இடங்களில் செய்துள்ளோம்.  கோவையில் இந்த முயற்சி ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட்டது. 

அதன்படி தற்போது நடைபெறும் விழாவில் 23,800 பேருக்கு 1278 கோடி ரூபாய் ரீடைல் லோன் வழங்கப்படுகிறது. மேலும் இன்று 2904 புதிய முத்ரா லோன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் கிராமப்புறத்தில் இருக்கும் பட்டியல் இனத்தை சார்ந்த மற்றும் மலைவாழ் பகுதியைச் சார்ந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும்  ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் 18 பேருக்கு கிட்டத்தட்ட 4 கோடி மதிப்பிற்கு தரப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

உறவினருடன் சண்டையிட்டு வெளியேறிய இளம்பெண்; நம்பவைத்து ஆசையை தீர்த்துக்கொண்ட காமுகன்கள்

மேலும் சாலையோர வியாபாரிகள் 7911 பேருக்கு 9.27 கோடி கடன் வழங்கப்படுகிறது. MSME க்கு 1043 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும்  2867 விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதேபோல் வேளாண் துறை சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்காளர்களுக்கு 3749 கோடி கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. 

கோவை பீளமேடு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடன் தேடி வங்கிகளுக்குச் சென்ற காலம் போய் தற்பொழுது வங்கிகள் நம்மை தேடி வரும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் சிறுகுறு தொழில்களுக்கு கடன் வழங்கக்கூடிய ஒரே வங்கி(SIDBI) நம் நாட்டில் உள்ளது. இன்று கோவையில் இரண்டாவது SIDBI வங்கி துவங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

click me!