கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரத்தில் ஈடுபட்டார்
கோவையில் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை ஆதரித்து சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர், செம டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கோவையில் உலக் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்: உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சி!
கோவை வடவள்ளி அதனை சுற்றியுள்ள பகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரபல சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில், நடனமாடி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கலா மாஸ்டரின் டான்ஸால் உற்சாகம் அடைந்த பா.ஜ.கவினரும் அவருடன் நடனம் ஆடினார்.
சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டரை, மானாட மயிலாட, போன்ற டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்த பொதுமக்கள் அவர் நேரில் வந்து நடனம் ஆடியதைப் பார்த்து உற்சாமாக கண்டு களித்தனர். பிரச்சாரத்திற்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கின்ற நிலையில், அண்ணாமலையை ஆதரித்து சினிமா நடன இயக்குனர் கலா மாஸ்டர், செம டான்ஸ் ஆடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.