அண்ணாமலை பிரசார வாகனத்தை மறைத்த பெண்: பல்லடத்தில் பரபரப்பு!

By Manikanda PrabuFirst Published Apr 7, 2024, 1:43 PM IST
Highlights

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசார வாகனத்தை பெண் ஒருவர் மறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை,  அத்தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வடுகபாளையத்தை சேர்ந்த சத்யா எனும் பெண் அண்ணாமலையில் பிரசார வாகனத்தை திடீரென வழிமறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதி இல்லை: செல்வப்பெருந்தகை காட்டம்!

அந்த பகுதியில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாகவும், குடிநீர் வழங்க 8000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் புகார் அளித்த அப்பெண், அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் பணிகள் மேற்கொள்ள லஞ்சம் வாங்கி கொண்டு தற்சமயம் பாஜவில் தஞ்சமடைந்து வருவதாக குற்றம் சாட்டினார். போதைப் பொருட்களால் கல்லூரி மாணாக்கர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும் அப்பெண் புகார் அளித்தார்.

தொடர்ந்து, இவற்றை எல்லாம் கவனித்து நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை உறுதியளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசார வாகனத்தை பெண் ஒருவர் திடீரென வழிமறித்து புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

click me!