கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என்ற பாஜக வேட்பாளரின் வாக்குறுதியை ஏற்று வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் உறுதி அளித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக கோவையில் நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தினர் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். நாம் தேசிய விவசாயிகளின் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.
மோடி மீண்டும் பிரதமரானால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்கள் உடைக்கப்படும்; திருமாவளவன் எச்சரிக்கை
மாநிலத் தலைவர் பிரபுராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தென்னை, பனை மரங்களில் இருந்து விவசாயிகள் கள் இறக்கவும், ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கவும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி பியூஸ் போனவர் - ராதிகா சரத்குமார் பரபரப்பு பேச்சு
இதனால், வரும் பாராளுமன்ற தேர்தலில் முழுமையாக விவசாயிகள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பிரபுராஜா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் குருசாமி, மாநில பொருளாளர் முத்து சிவன்,மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநிலத் துணைச் செயலாளர் துரைராஜ், செல்வராஜ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன், கோவை மண்டல செயலாளர் வரதராஜன், உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.