காரில் வந்த காங்கிரஸ் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்; போலீஸ் வலைவீச்சு

By Velmurugan s  |  First Published Apr 18, 2024, 7:37 PM IST

கோவையில் மதுபோதையில் பைக்கில் வந்த இருவர் காரில் வந்த காங்கிரஸ் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டி மாத்தப்பூர்  பகுதியில் காரில் வந்த காங்கிரஸ் நிர்வாகியான வழக்கறிஞர் மீது மது போதையில் இருந்த இரண்டு பேர் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பாலா மற்றும் இளையராஜா என்கிற இருவர் சேர்ந்து நடத்தும் மின் பணி ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரியவர்கள் எனக் கூறப்படுகிறது. 

“GPay மூலம் பாஜக பணப்பட்டுவாடா” அண்ணாமலை மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

இருவரும் புதன்கிழமை இரவு தென்னம்பாளையத்தில் இருந்து மாதப்பூர் செல்லும் சாலையில் மது போதையில் வழக்கறிஞர் சென்ற காருக்கு முன்னால் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தை நிறுத்தி வழியை மறித்துள்ளனர். அப்போது எதற்காக நிறுத்துகிறீர்கள் என கேட்டவுடன் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். தான் இதே பகுதியைச் சேர்ந்தவர் மேலும் காங்கிரஸ் நிர்வாகி என கூறியும் மது போதையில் இருந்து இருவரும் தகாத வார்த்தையில் பேசி வழக்கறிஞர் பிரபாகரன் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

வியர்வை சிந்தி விதைத்தவை அறுவடையாகும் நாள் தான் வாக்குப்பதிவு நாள்; விழிப்புடன் இருங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்

இது பற்றி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் விசாரிப்பது அறிந்தவுடன் அழகர்சாமி(30), மனி(31) ஆகிய இருவரும் தப்பியோடி தலை மறைவு ஆகிவிட்டனர். மேலும் அப்பகுதியில் தாங்கள் இருவரும் போலீசார் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் எனவும் கூறுகின்றனர்.  இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் வழக்கறிஞர் பிரபாகரனுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

click me!