7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளித்து சாதனை படைத்த கோவை பெண்.. குவியும் பாராட்டுகள் !!

By Raghupati R  |  First Published Nov 9, 2022, 5:36 PM IST

7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு உணவளிக்க கோவை பெண் 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக அளித்துள்ளார்.


கோவையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் ஏழு மாதங்களில் 42 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை படைத்துள்ளார். சுமார் 1,400 குழந்தைகளுக்கு உணவளிக்க பால் பயன்படுத்தப்பட்டது. டி சிந்து மோனிகா என்ற பெண் தான் இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் இல்லத்தரசியாக இருக்கிறார்.

ஜூலை 2021 இல், மாநில அரசாங்கத்தின் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (NICU) பால் தானம் செய்யத் தொடங்கினார் டி சிந்து மோனிகா. ஏப்ரல் 2022 வரை அவர் சுமார் 42, 000 மில்லி பாலை தானம் செய்தார். அவரது உயிர்காக்கும் முன்முயற்சிக்காக, அவர் ஆசிய புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க..10% இட ஒதுக்கீடு.! உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா ? சர்ச்சைகளுக்கு காரணம் என்ன ?

பொறியியல் பட்டதாரியான மோனிகா, தனது மகள் பிறந்த 100வது நாளில் தாய்ப்பாலை தானம் செய்யத் தொடங்கினேன் என்றார். என் குழந்தைக்கு உணவளிப்பதைத் தவிர, அமிர்தம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரூபா செல்வநாயகியின் அறிவுறுத்தலின்படி நான் தாய்ப்பாலைச் சேகரித்து பாதுகாத்தேன் என்று கூறினார் மோனிகா.

என்ஜிஓ ஒவ்வொரு வாரமும் பாலை சேகரித்து தாய் பால் வங்கியிடம் ஒப்படைத்தது. செல்வநாயகி 2020 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கு உணவளிக்கும் முயற்சியைத் தொடங்கினார். இப்போது, ​​தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்த மொத்த 50 பெண்களில் சுமார் 30 பேர் தொடர்ந்து தாய்ப்பாலை தானம் செய்கிறார்கள்.

இந்தியா முழுவதும் 70 தாய்ப்பால் வங்கிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 45 தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 35 தாய்பால் வங்கிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மீதமுள்ள 10 தாலுகா மருத்துவமனைகளிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

இதையும் படிங்க..தேர்வில் காப்பி.! கண்டித்த ஆசிரியர்.! 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் !

click me!