உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது மோதிய லாரி... கோவை நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

By Narendran SFirst Published Nov 8, 2022, 8:02 PM IST
Highlights

கோவையில் ரயில்வே தரை பாலத்தின் முன்பு இருந்த உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் ரயில்வே தரை பாலத்தின் முன்பு இருந்த உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருந்து சிறிய கண்டெய்னர் லாரி ஒன்று கோவை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. கோவை அரசு மருத்துவமனை அருகே வரும்போது ரயில்வே தரைப்பாலத்தின் முன்பு இருந்த உயர கட்டுப்பாட்டு தூண் மீது மோதியது. இதில் அந்த இரும்பு தூண் லாரி மீது விழுந்தது.

இதையும் படிங்க: 9 மாவட்டத்தில் போலி வங்கிகள்.!! உஷாரா இருங்க மக்களே.! எச்சரிக்கும் காவல்துறை

இதனால் லாரியின் முன்புறம் முழுவதும் நொறுகியது. அந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாலத்தின் முன்பு அதிக எடை கொண்ட உயரத்தடை இரும்புத்தூண் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மீது இதுவரை மூன்று கனரக வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியானது.. எவ்வாறு தெரிந்து கொள்வது ? முழு விபரம்

தற்போது மோதிய லாரி கர்நாடகாவில் இருந்து சாக்லேட் பொருட்களை ஏற்றி வந்ததாகவும் வேலையை முடித்துவிட்டு மீண்டும் கர்நாடகாவிற்கு செல்லும்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றிவிட்டனர். பின்னர் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் இரும்புத்தூனை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!