எலிகாய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு.. கோவையில் பரபரப்பு !

By Raghupati R  |  First Published Nov 7, 2022, 10:02 PM IST

கோவையில் எலிகாய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளபணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  ரேசோலியே கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது மனைவி வனிதா ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார். கடந்த பத்து தினங்களுக்கு மேலாக வனிதாவுக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிரிச்சுக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரிசோதனையில் வனிதாவிக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மனிதாவிற்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறால் ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

இதையும் படிங்க.கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது தெரியுமா ? நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

மருத்துவர்கள் வனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் வனிதா உயிரிழந்தார். இதை அடுத்து அவர் வசித்த பகுதி பணிக்கம்பட்டியில் சுகாதாரத் துறையினர் அங்குள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தும் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கிராமம் முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண் எலிக் காய்ச்சலில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?

click me!