கோவை அமைதியை சீர்குழைக்கிறது கார் சிலிண்டர் விபத்து… அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து!!

By Narendran S  |  First Published Nov 7, 2022, 6:31 PM IST

கோவையின் அமைதியை சீர் குழைக்கும் விதமாகவே கார் சிலிண்டர் விபத்தை பார்ப்பதாக தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 


கோவையின் அமைதியை சீர் குழைக்கும் விதமாகவே கார் சிலிண்டர் விபத்தை பார்ப்பதாக தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளுக்கு நான் சென்றுள்ளேன். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறம்பாக உள்ளது. கோவையை பொருத்தவரை  அமைதியாக உள்ளது. அந்த அமைதியை சீர் குழைக்கும் விதமாக சிலிண்டர் விபத்தை நான் பார்க்கிறேன். வன்முறை, தீவிரவாதம் பொன்றவற்றுக்கு எதிராக தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

இதையும் படிங்க: மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிவு… ஒப்பந்த தொழிலாளர் பலி!!

Latest Videos

undefined

கோவையின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கோவையில் காவல்துறையினரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. ஐடி துறையில், நான் முதல்வன் திட்டம் போன்றவற்றை தமிழக முதல்வர் அறிவித்து திறன் மேம்பாட்டை மேம்படுத்தி வருகிறார். ஐடி துறையை பொருத்தமட்டில் தமிழகத்தை நம்பி வரும்  அனைவரு‌க்கும் தேவையான உதவிகள் அனைத்தும் தமிழக அரசு செய்து வருகிறது. ஐடி துறை நடத்துவதற்கு, முறையான, பாதுகாப்பு இருக்க வேண்டும். அவர்களுக்கான கட்டமைப்பு இருக்க வேண்டும், அதற்கான கட்டமைப்பை அரசு ஏற்படுத்தி தருவதில் முனைப்பாக உள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கை.. பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்ட அறிவிப்பு..

மனிதவள மேம்பாடு போன்றவற்றை பல்வேறு சிறப்பு மிக்க நடைவடிக்கைகளை தமிழகத்தில் அரசு செயல்படுத்தி  உள்ளது. கடந்த ஆண்டுகளில் 10 % இருந்த இத்துறை தற்போது 20 % கூடுதலாக இயங்கி வருகின்றது. மின்கட்டனம், நியாயமான மின்கட்டனமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மின்கட்டணம் உயர்வு அடைந்துள்ளது. அனைத்து விலைவாசிகளும் உயர்வை கண்டுள்ளது. அதனால் தொழில் துறைக்கு ஏற்ற வகையில் மின்கட்டணம் உள்ளது. இதில் குறை இல்லை என்று தெரிவித்தார். முன்னதாக கோவை சாலையில் உள்ள பி எஸ் ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். 

click me!