கோவையில் பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் போதை பொருள்கள், பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் "பள்ளிக் கூடம் 2.0" ஜூலையில் தொடங்க உள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். Project பள்ளிக்கூடம் மூலம் கடந்த கல்வி ஆண்டில் மாவட்ட காவல்துறை ஒரு ஆண்டு செய்தது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு வழங்கி பல குற்றங்களை தடுத்தோம். பள்ளிக்கூடம் 2.0 தொடங்குகிறது. இந்த முறை video audio முறைக்காக projectors உடன் செல்ல உள்ளோம்.
தற்காப்பு கலை, போதைக்கு எதிரான விழிப்புணர்வு செய்ய உள்ளோம். இம்முறை பள்ளிக்கூடம் 1.0 இல் செய்யப்பட்டவற்றை புத்தகமாக வெளியிட உள்ளோம். Misson Drugs Free கோவை என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்ய முடிவு.ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்க உள்ளோம்.
விஜய் முதல்வராக வரவேண்டும் என்ற ஆசையில் தவறில்லையே - பாஜக எம்எல்ஏ நயினார் நகேந்திரன்
தற்காப்பு கலை தொடர்பான நிறுவனங்கள் உடன் இணைத்து வகுப்புகள் எடுக்க உள்ளோம். கடந்த முறை 2025 வழக்குகள் பள்ளிக்கூடம் 1.0 மூலம் பதிவு செய்யப்பட்டன. Project பள்ளிக் கூடம் கோவையில் மட்டுமே project ஆக எடுத்து செய்து வருகிறோம். சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு திட்டத்தின் போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே தடுக்கப்பட்டுள்ளன.
கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல்; நீதிமன்றம் அதிரடி
தொழில்நுட்ப ரீதியிலான குற்றங்கள் குறித்து கேட்டபோது, தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் எனவே அது போன்ற குற்றங்களில் சிக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். PROJECT பள்ளிக்கூடம் திட்டம் பழங்குடியினர் மாணவர்களுக்கும் சென்றடைய நிச்சயம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.