திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த குரங்குகள் - வைரல் வீடியோ!

By Raghupati RFirst Published Dec 24, 2022, 8:18 PM IST
Highlights

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாய்கள், பூனைகள், அணில்கள் ஆகிய விலங்குகள் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாகும். அவ்வப்போது மயில்களும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கட்டிடங்களின் மீது கூட்டமாக காணப்படும். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான அலுவலகங்கள் விடுமுறையால் மூடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க.. Kamal : ராகுல் நேருவின் கொள்ளுப்பேரன்.. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் - டெல்லியில் மாஸ் காட்டிய கமல் ஹாசன்!

சுமார் மாலை 4 மணியளவில் நான்கு குரங்குகள் கொண்ட ஒரு கூட்டம் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்தது. கட்டிடங்களில் தாவித்தாவி அருகில் இருந்த மரங்களில் ஏறியது. அந்த குரங்குகள் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கட்டிடங்களில் ஓடி மறைந்தது. இன்று பெரும்பாலான அலுவலகங்கள் விடுமுறை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டமின்றி காணப்பட்டது.

இதையும் படிங்க..காது கேட்கும் கருவி 10 ஆயிரம் இல்லை.. 350 தான்! கடைசியாக ஒத்துக்கொண்ட அண்ணாமலை!

இதனால் எவ்வித அச்சமும் இன்றி குரங்குகள் சாவகாசமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரிந்தன. இந்த குரங்குகள் கோவை வ.உ.சி பூங்காவிலிருந்து தப்பி வந்ததா ? அல்லது வனப்பகுதியில் இருந்து வெளியேறி வழி தெரியாமல் நகர் பகுதிக்குள் வந்து விட்டதா ? என்றே கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க.. வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!

click me!