காலி மதுபாட்டில்களுக்கு கிடைக்கின்ற மதிப்பு கூட தேங்காய்களுக்கு இல்லை - விவசாயிகள் வேதனை

By Velmurugan s  |  First Published Jul 10, 2023, 2:39 PM IST

காலி மதுபாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்களுக்கு கிடைப்பத்தில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னை சார்ந்த தொழில்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

அரசாங்கமே தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னையை பாதிக்கும் நோயை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டு பட்டுப்போன தென்னை மரங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 

Latest Videos

நாட்டை நாளுக்கு நாள் அமைதியின்மையை நோக்கி பாஜக அழைத்துச் செல்கிறது - வேல்முருகன் குற்றச்சாட்டு

தென்னை நல வாரியம் அமைத்திட வேண்டும். பொள்ளாச்சியை மையமாக வைத்து தேங்காய் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோரிக்கை மனுவை அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காலி மது பாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்க்கு கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தேங்காய், இளநீர், காலி மதுபாட்டில்கள் ஆகியவற்றை எடுத்து வந்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோவையில் விமான படை அதிகாரி ஒட்டி வந்த கார் அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி!

click me!