கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்றிரவு உணவு உண்பதற்காக கோவை சாய்பாபாகாலனி என் எஸ் ஆர் சாலையிலுள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு காலிஃபிளவர் தோசை, பன்னீர் தோசை, இட்லி, புரோட்டா உள்ளிட்டவற்றை ஆர்டர் கொடுத்துள்ளார்.
undefined
அப்போது அனைத்து உணவு வகைகளும் வந்த நிலையில் காலிஃபிளவர் தோசையை சாப்பிட முற்பட்டபோது அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உணவருந்திய பிரசாந்த் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கூறவே அலட்சியமாக பதில் அளித்த உணவக நிர்வாகத்தினர் அதற்கு பதிலாக வேறு தோசை கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றம்
ஆனால் அதை ஏற்காத வாடிக்கையாளர் பிரசாந்த் சமையலறை முழுவதையும் தூய்மை படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு உணவகத்தினர் சம்மதிக்க மறுத்ததையடுத்து வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். தற்போது பிரபல உணவகத்தில் தோசையில் கரப்பான்பூச்சி இருந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை விட நிதியமைச்சரின் ஆடியோ தான் இப்போ டிரெண்ட் - செல்லூர் ராஜூ நக்கல்