ஈவேரா உடலுக்கு அஞ்சலி செலுத்த கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார்.
ஈவேரா உடலுக்கு அஞ்சலி செலுத்த கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு சென்றார்.
இதையும் படிங்க: விஜிலென்ஸில் பிடித்து கொடுத்துவிடுவேன்… தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரரை விளாசிய ஆட்சியர்!!
விமான நிலையத்தில் அவரை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் சமீரன், ஏடிஜிபி சங்கர், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், எஸ்பி பத்திரிநாராயணன், திமுக மாவட்ட செயலாளர்கள் வரவேற்றனர்.
இதையும் படிங்க: அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் கொள்கை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஈரோடு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் கார் மூலம் கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு இரவு ஓய்வு எடுக்கும் மு.க.ஸ்டாலின், நாளை காலை சென்னை புறப்பட்டு செல்கின்றார். அவருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கேஎன்.நேரு, காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கனிமொழி எம்பி ஆகியோரும் உடன் வந்துள்ளனர்.