Asianet News TamilAsianet News Tamil

விஜிலென்ஸில் பிடித்து கொடுத்துவிடுவேன்… தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரரை விளாசிய ஆட்சியர்!!

காஞ்சிபுரம் அருகே இருளர் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரரை ஆட்சியர் கடுமையாக எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காஞ்சிபுரம் அருகே இருளர் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரரை ஆட்சியர் கடுமையாக எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துகாடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. தலா ரூ.4,62,000  மதிப்பில் 76 குடியிருப்புகள் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிலையில் அதனை அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: நீங்களா ஏன் இங்க குளிக்கிறீங்க.? புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை.. மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

அப்போது, குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது தெரிய வந்தது. இதை அடுத்து ஒப்பந்ததாரர் பாபுவிடம், இது குறித்து விளக்கம் கேட்க ஆட்சியர் ஆர்த்தி, என்ன செய்து வச்சிருக்கீங்க, இது ஏழைகளுக்கான வீடு. தொட்டாலே சிமெண்டெல்லாம் உதிர்கிறது. இப்படியா வீடு கட்டுவது.

இதையும் படிங்க: கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் - முதல்வர் ஸ்டாலின்

இந்த வீட்டின் மதிப்பு என்னனு தெரியுமா? 4.62 லட்ச ரூபாய்க்கான வீடா இது? இந்த மாதிரி செய்தீங்கன்னா, நான் கான்ட்ராக்ட்டை கேன்சல் செய்துவிடுவேன். விஜிலென்ஸில் பிடித்து கொடுத்துவிடுவேன். தரமற்ற வகையில் குடியிருப்புகளை கட்டும் இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணியை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். 

Video Top Stories