கோவையில் பிரபல தனியார் உணவக சிக்கனில் இரும்பு கம்பி; பெங்களூருவில் இருந்து அதிரடி காட்டிய வாடிக்கையாளர்

By Velmurugan s  |  First Published May 3, 2024, 7:56 PM IST

குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரபல தனியார் உணவக சிக்கனில் இரும்பு கம்பி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவன கடையில் நான்கு வகையான சிக்கன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். 

அந்த சிக்கனை உண்ணும் போது சிக்கன்குள் இரும்பு கம்பி இருந்தைதக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தை அதனை தனது அம்மாவிடம் தெரிவித்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர். இது குறித்து பெங்களூருவில் இருக்கின்ற தனது கணவர் சுதாகரிடம் தெரிவித்துள்ளார்.

Latest Videos

மாட்டு சாணத்தை பொட்டலம் போட்டு கஞ்சா என விற்பனை; முதலீடே இல்லாமல் லட்சாதிபதியாக நினைத்த இளைஞர்கள்

உடனடியாக அந்த பன்னாட்டு நிறுவன சிக்கன் உணவகத்திற்கு சுதாகர் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்துள்ளார். ஆனால் அவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து உணவு விநியோகம் செய்யும் ஜூமோட்டோ நிறுவனத்திற்கு புகார் அளித்து உள்ளார். அந்த நிறுவனத்தினர் அவர்களுக்கு உண்டான ஆர்டரின் பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி உள்ளனர். 

அதை ஏற்க மறுத்த சுதாகர் தனது மனைவியிடம் அந்த உணவில் இருந்த கம்பியை புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்ப கூறியுள்ளார். அந்தப் புகைப்படங்களை சுதாகர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து இதுபோன்று பன்னாட்டு நிறுவன கிளை உணவகத்தில் ஆர்டர் செய்யும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பெற்றோர் கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை பதிவை வெளியிட்டு உள்ளார்.

ISRO: 2040ல் நிலவில் மனிதர்களை தரையிரக்க இஸ்ரோ திட்டம்; முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

தற்பொழுது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளதாகவும், மீதமிருந்த சிக்கனை பிரித்து பார்க்கும் பொழுது அதில் புழுக்கள் இருந்ததாகவும் வீடியோ பதிவு செய்து உள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!