கோவை மாநகரின் முக்கிய பகுதியில் கொள்ளை.. அதிர வைக்கும் CCTV வீடியோ - பரபரப்பு சம்பவம்

Published : May 07, 2023, 08:33 PM IST
கோவை மாநகரின் முக்கிய பகுதியில் கொள்ளை.. அதிர வைக்கும் CCTV வீடியோ - பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

கோவை கடை வீதியில் உள்ள துணிக் கடையின் பூட்டை உடைத்து துணிகள் திருடி செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள டவுன்ஹால் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சிட்டி பஜார் என்ற துணிக் கடை இருக்கிறது. அந்த கடையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து துணிகளை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் நாசர் அப்பகுதி வணிகர் சங்க தலைவருக்கு தகவல் தெரிவித்து உள்ளதாகவும், மேலும் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து பின்னர் காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். கோவை மாநகரின் மத்திய பகுதியான மாநகராட்சி அருகே இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ரூ.15000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

மேலும் அப்பகுதி ஒட்டி ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு கடைகள் உள்ளது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?