Watch : மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கும் பழைய பாலம்! புதிய பாலம் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

By Dinesh TG  |  First Published Apr 26, 2023, 2:36 PM IST

மேட்டுப்பாளையம் அருகே ஆண்டிற்கு ஆறு மாதம் தண்ணீரில் மூழ்கும் பழைய பாலத்திற்கு மாற்றாக, லிங்காபுரம் காந்தவயல் இடையே 14 கோடி ரூபாய் செலவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.
 


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள லிங்காபுரம் மற்றும் காந்தவயல் இடையே ஏற்கனவே உள்ள 21அடி உயரம் கொண்ட உயர் மட்ட பாலம் ஒன்று உள்ளது

காந்தையாற்றின் குறுக்கு கட்டப்பட்டுள்ள இந்த உயர் மட்ட பாலம் ஆண்டு தோறும் பெய்யும் பருவமழை காலங்களில் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போதும் பவானி சாகர் அணை நிரம்பும் போதும் இந்த பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிடும்.

இதனால் காந்தவயல், லிங்காபுரம், உளியூர், ஆளூர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த பாலத்தை கடந்தால் தான் அந்த பகுதியில் இருந்து சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர முடியும்

இந்த நிலையில் ஆண்டு தோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் காரணமாக இந்த பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்குவதால் ஆறு மாதங்கள் முதல் எட்டு மாதங்கள் வரை இந்த பகுதி மக்கள் போக்குவரத்து முற்றிலும் முடங்கி ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் மற்றும் விவசாயிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்



எனவே இந்த பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று நடந்த முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய பாலம் கட்ட 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை மூலம் பல கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. 53அடி உயரத்தில் 168மீட்டர் நீளம், 10மீட்டர் அகலும் கொண்ட இந்த பாலம் ஆற்றின் நடுவே ஆறு பில்லர் களை கொண்டு கட்டப்பட உள்ளது

இந்த பாலம் கட்டும் பணிகளை சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி மற்றும் மன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த பாலம் கட்டி முடிக்கபட்டால் இந்த பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Latest Videos

click me!