அதிமுகவின் போராட்டம் சிரிப்பை வரவழைக்கிறது… அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்!!

By Narendran SFirst Published Nov 30, 2022, 7:42 PM IST
Highlights

அதிமுகவின் போராட்டம் சிரிப்பை வரவழைப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார். 

அதிமுகவின் போராட்டம் சிரிப்பை வரவழைப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் 2415 சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. கிராம சாலைகள் தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 10 ஆயிரம் கிலோ மீட்டர் தரம் உயர்த்தப்படும். 15 நாளில் பணிகள் தொடங்கப்படும். கோவை விபத்து மாவட்டமாக உள்ளது. இதனால் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 37 பகுதி விபத்து பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 13 இடம் சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் விபத்து குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய கூட்டத்தின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கவனம் கொண்டு செல்வேன்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..! சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் நியமனம்

அதிமுக போராட்டம் தொடர்பாக பத்திரிக்கை பார்த்து தெரிந்து கொண்டேன். சாலை விவகாரப் போராட்டம் சிரிப்பு வருகிறது. 10 ஆண்டு ஆட்சி நடத்தியவர்கள் தான் காரணம். நாங்கள் வந்து ஒன்றரை ஆண்டுதான் ஆகியுள்ளது. தங்களை அடையாளப்படுத்த போராட்டம் இருக்கும். அவர்கள் போட்ட சாலை தவறான சாலை. அதற்குப் போராடுகிறார்கள். கடனை வைத்துபோன அரசு அதிமுக அரசு. கோவையில் இரண்டு பாலங்கள் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள். மார்ச் மாதத்திற்குள் பாலப் பணி முடிந்து விடும். எட்டு வழி சாலை திட்டம் கொள்கை முடிவு. சாலை போடப்படுமா இல்லையா என்பதை முதல்வருடன் பேசி தான் முடிவு எடுக்கப்படும். மதுக்கரை முதல் மேட்டுப்பாளையம் வரை புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் சரியாகும். நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்படும். அதிக ஆணைகள் வழங்கிய அரசு திமுக அரசு. கோவையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க முதல்வர் தொழிற்சாலை உருவாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: என் தங்கமே லட்சுமி.. நீ போய்டியே! தன் வீட்டு உறவை இழந்தது போல் யானையின் இழப்பை நினைத்து கதறும் புதுவை மக்கள்!

காரமடை , மேட்டுப்பாளையம், பைப்பாஸ் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதன் மூலம் நெரிசல் குறைக்கப்படும். ஆன்மீகம் அதிகமுள்ள ஊரில் கால்நடைகள் உள்ளன. அப்படி சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறநிலை துறை மூலமும் கால்நடைகள் கோசாலைகளில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கலையரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

click me!