கோவையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் நடுரோட்டில் படுத்து உறங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் நடுரோட்டில் படுத்து உறங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை பார்க் கேட் நேரு உள்விளையாட்டு அரங்கம் பகுதியில் பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு சாலையோர பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், பழக்கடைகள், டீக்கடைகளும் இயங்கி வருகின்றன.
இதையும் படிங்க: முயலை விழுங்கிவிட்டு நகர முடியாமல் ஒய்யாரமாக ஓய்வெடுத்த பாம்பு; வீட்டு உரிமையாளர் ஷாக்
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் மது போதையில் இருந்த ஒரு நபர் சாலையிலேயே படுத்து உறங்கினார். முதலில் அவரே எழுந்து விடுவார் என்று பலரும் எண்ணிய நிலையில் அவர் எழுந்திரிக்காமல் உறங்கி கொண்டே இருந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள், கடைக்காரர்கள் அவரை எழுப்ப முற்பட்டனர்.
இதையும் படிங்க: தேசிய அளவில் முதலிடம் பிடித்த மதுரை முதுகலை மருத்துவர்… டிடிவி தினகரன் பாராட்டு!!
அப்போது அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்ததாலும் அதிக மது போதையில் இருந்ததாலும் அவரால் எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்களே அவரை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர். மது போதையில் நடு ரோட்டில் படுத்து உறங்கிய நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.