கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் பகலில் உலா வரும் ஒற்றை காட்டுயானை வீடியோ வைரல்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியில் உள்ளன. இப்பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் பயிர்டப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்தை விட்டு கூட்டமாக வெளியேறும் காட்டு யானைகள் தென்னை மரங்களை சாய்த்து குருத்துகள் சாப்பிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் ஆழியார் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை தென்னை மரத்தை சாய்த்து இளநீர், தேங்காய், குருத்து உள்ளிட்டவற்றை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து வெளியேறிய புகையால் ஓட்டம் பிடித்த பயணிகள்
இது தொடர்பாக தனியார் தோட்டத்து உரிமையாளர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒற்றைக் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுப்பு