கோவையில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பணிப்பெண்ணின் அத்துமீறல்களை மருத்துவ தம்பதியர் மறைந்திருந்து வீடியோவாக வெளியிட்டு தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த பாரதி(வயது 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போயுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதனால் பணிப்பெண் பாரதி மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து பாரதியை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துக்குமார் மற்றும் பாரதி வெளியில் செல்வது போல் புறப்பட்டு படுக்கை அறையில் பீரோவின் எதிரே உள்ள மேல் சிளாபில்(கபோர்டு) ஏறி மறைந்து இருந்துள்ளனர்.
கூட்டணி கட்சிகள் அனைவரும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் - மாநில துணைதலைவர் கண்டிஷன்
அதனை தொடர்ந்து அங்கு வந்த பணிப்பெண் பாரதி பீரோவில் இருந்த 10 கிராம் நகை, மற்றும் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இதனை மறைந்திருந்து செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர்கள் பாரதியை கையும் களவுமாக பிடித்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தடாகம் காவல்துறையினர் பாரதியை கைது செய்தனர். தற்போது பணிப்பெண் பாரதி திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.