பாஜகவின் சிறப்பான ஆட்சியே நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் - மத்திய அமைச்சர் பெருமிதம்

By Velmurugan s  |  First Published Feb 22, 2024, 5:08 PM IST

2014 ம் ஆண்டு வரை செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் செல்போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே ஜி ஐ எஸ் எல் கல்வி குழுமம் சார்பில் எதிர்கால நகர்வு தொழில்நுட்ப மையம் எனும் புதிய மையம் துவக்க விழா நடைபெற்றது. கல்வி குழும தலைவர் அசோக் பக்தவச்சலம்  தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று மையத்தை துவக்கி வைத்தார். 

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், இந்தியா தற்போது புதிய இந்தியாவாக கடந்த 10 ஆண்டுகளில் உருவெடுத்துள்ளது. தொழில்நுட்ப கட்டமைப்பு மிகவும் வலு பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பின்தங்கி இருந்த இந்திய பொருளாதாரம் இன்று உலகிலேயே சிறந்த பொருளாதார நாடு என்ற அளவில் முன்னேறியுள்ளது. உலக அளவில் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உள்ள நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. 

ஆசைஆசையாய் காதலனை கரம் பிடித்த ஆசிரியை; 6 மாதத்தில் மர்மமான முறையில் மரணம் - திருச்சியில் பரபரப்பு

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இன்றைய இளைஞர்கள், அரசியல் பிரதிநிதிகளாக மாறுவதற்கு முக்கிய வழி வகுக்கும். பாஜக தலைமையிலான மத்திய அரசின் சிறப்பான ஆட்சியே நாட்டின் தொழில்நுட்ப வளர்சிக்கு காரணம். கடந்த 2014ம் ஆண்டு வரை செல்போன்கள் சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே பல செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கி உள்ளன. 

தொலைநோக்குடன் பட்ஜெட் போடுவது பாஜக; கமிஷனுக்காக பட்ஜெட் போடுவது திமுக - அண்ணாமலை

இதன் அடிப்படையில் இன்று உலகிலேயே மிகப்பெரிய செல்போன்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி அவர் கவுரவித்தார்.

click me!