கோவையில் 108 பெட்டி கடைகளில் சுமார் 87.516 கிலோ எடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 01.10.2023 முதல் 23.11.2023 தேதி வரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு 23 சிறப்பு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் திடீர் கள ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
undefined
தற்போது வரை கள ஆய்வின் போது 108 பெட்டி கடைகளில் சுமார் 87.516 கிலோ தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய். 87,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கள ஆய்வின் முடிவில் முதல் முறை குற்றம் புரிந்த 106 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் முதல் முறை குற்றம் புரிந்ததற்கு அபராதமாக ரூபாய் 5000/- வீதம் மொத்தம் ரூபாய் 5,30,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட தனயார் பேருந்து மோதி பைக், லாரி ஓட்டுநர் படுகாயம்
மேலும் இரண்டாவது முறையாக குற்றம்புரிந்த சூலூர் வட்டார பகுதியில் ஒரு கடைக்கு ரூ.10,000/- விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக குற்றம் புரிந்ததற்காக மலுமிச்சம்பட்டி பகுதியில் 1 கடை மூடப்பட்டு அபராதமாக ரூ.25,000/விதிக்கப்பட்டுள்ளது. அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மொத்தமாக ரூபாய் 5,70,000/- அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனவே சிறப்பு தனிக் குழுவான காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையுடன் ஆய்வு மேற்கொள்ளும் போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அந்த கடை மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.