கோவை ரத்தினபுரியில் 7 நாட்களில் 7 இடங்களில் கொள்ளை; கதவுகளை பூட்டிக்கொண்டு காவல் காக்கும் உரிமையாளர்கள்

By Velmurugan s  |  First Published Sep 13, 2023, 5:30 PM IST

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் கடந்த 7 நாட்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட GPM நகர், பூம்புகார் நகர், சேவா நகர் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

நேற்று பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதாகவும், அதற்கு இரண்டு நாட்கள் முன்பு காலை 6 மணியளவில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க திருடர்கள் முயற்சித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரும்பளவில் அச்சம் அடைந்துள்ளனர்.

மக்களே உஷார் வேகமாக பரவும் உயிர் கொல்லி டெங்கு; பொறியல் கல்லூரி மாணவி பலி 

காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினர். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!