கோவையில் மேயர் குடும்பத்தினர் மீது புகாரளித்த பெண்ணின் கார் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Sep 12, 2023, 6:40 PM IST

கோவையில் மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது புகார் அளித்திருந்த சரண்யா என்ற பெண்ணின் கார் இன்று பிற்பகல் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

In Coimbatore the car of the woman who complaint against mayor's family caught fire mysteriously vel

கோவை மணியக்காரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கி இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில்  வசித்து வருகிறார். இந்நிலையில் தன்னை எதிர் வீட்டில் இருந்து  காலி செய்ய வைக்க மேயர் குடும்பத்தினர் தொல்லை கொடுப்பதாகவும், குப்பைகளையும், அழுகிய பொருட்களையும் வீட்டின் அருகில் போடுவதாகவும், சிறுநீரை  பிடித்து ஊற்றுவதாகவும், வீட்டின் முன்பு மந்திரித்த எலுமிச்சை பழங்களை வைப்பதாகவும் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்திருந்தார்.

Mayor Kalpana

Tap to resize

Latest Videos

இந்நிலையில் சரண்யாவின்   கார் இன்று பிற்பகல் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. காரின் ஒரு பகுதி தீயில் சேதம் அடைந்த நிலையில் இது குறித்து காவல்துறையில் சரண்யா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோவை மாநகர காவல் துறையினரும்,  தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து சரண்யாவிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் கார் தீ பிடித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்க ஏரியா உள்ள வராத; மது போதையில் அரசுப் பேருந்தை வழிமறித்து ரகளை செய்த குடிமகன்கள்

காரின் மீது கவர்  போடப்பட்டிருந்த நிலையில், கவரில் பற்றிய தீ காரின் ஒரு பகுதியை சேதமாக்கி இருப்பதும் தெரிய வந்தது. இது திட்டமிட்டு எரிக்கப்பட்டதா அல்லது விபத்தா என்பது குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

vuukle one pixel image
click me!