கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது; 40 சவரன் மீட்பு

By Velmurugan s  |  First Published Feb 1, 2023, 12:34 PM IST

கோவையில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 40 சவரன் நகைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.


கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர்(26), கண்ணையா (30),  பார்வதி(67) முத்தம்மா(23),  கீதா(24) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஐவர் மீதும் கோவை மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக இவர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அன்புமணினா டீசன்ட், டெவலப்மென்ட்னு நினைச்சீங்களா? சிங்கம் பட பாணியில் தெறிக்க விடும் அன்புமணி ராமதாஸ்

Latest Videos

undefined

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் சந்தீஷ், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் பொதுமக்களின் உடைமைகளை திருடுவார்கள். பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கும்போதும் பொது இடங்களில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாக படுகொலை; காவல்துறை குவிப்பு

மேலும் இவர்கள் மீது குண்டர் சட்டம் போட உள்ளதாகவும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். 

click me!