கோவை பூ மார்க்கெட் பகுதியில் பெண்கள் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்றுள்ளார்.
அழகு நிலையத்தில் 23 வயது பெண் மீது 40 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் பெண்கள் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்றுள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்யவும் வந்துள்ளார். அப்போது 23 வயது பெண் அங்குள்ள இருக்கையில் முன்பக்கமாக சென்று அமர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 40 வயது பெண் சங்கீதா எதற்காக வந்தாய் என 23 வயது பெண்ணிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 40 வயது பெண் 23 வயது இளம் பெண்ணை அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.