கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற இராணுவ வீரர் உள்பட 4 நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் செர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது 27). கொச்சினில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது நிறுவனத்திற்குத் தேவையான கனிணி மற்றும் அது தொடர்பான மின்சாதனப் பொருட்களை வாங்க தனது காரில் பெங்களூரு சென்றுள்ளார். பெங்களூருவில் தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு கோவை வழியாக தேசிய நெஞ்சாலையில் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென 2 இன்னேவா கார்களில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அஸ்லாம் சித்திக்கின் காரை இடித்து சாலை ஓரமாக நிறுத்தி உள்ளனர். கார் நின்ற அடுத்த நொடியே காரில் இருந்து வேக வேகமாக இறங்கி வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சித்திக்கின் காரை கடுமையாக சேதப்படுத்தத் தொடங்கினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சித்திக் தனது காரை வேகமாக பின்னோக்கி இயக்கியும், கொள்ளையர்களை இடித்து தள்ளிவிட்டும் அங்கிருந்து தப்பி உள்ளார்.
undefined
பின்னர் அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தொடர்பு கொண்ட சித்திக் தமக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். மேலும் சித்திக் காவல் துறையினரிடம் முறையிடுவதை கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினர். பின்னர் சித்திக் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காரை கொள்ளையடிக்க முயன்ற கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிவதாஸ், ரமேஷ் பாபு, விஷ்ணு, அஜய் குமார் ஆகிய 4 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் சிவதாஸ், அஜய் குமார் இருவரும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றனர். மேலும் விஷ்ணு இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்ததுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே தமிழகம் தான் - கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
மேலும் இந்த விவகாரத்தில் தப்பி ஓடிய 4 நபர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து தமிழகம், கேரளா என இரு மாநிலங்களிலும் அதிகாரிகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவை வழியாக கொண்டுவரப்படும் ஹவாலா பணத்தை கொள்ளையடித்தால் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.