பொள்ளாச்சி அருகே ஆனைமலை சாலை தென் சங்கம் பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறை சித்தூரை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவரது மகன் தினேஷ்குமார்(16) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் இருசக்கர வாகனத்தில் NM சுங்கத்தில் இருந்து வந்து கொண்டு கொண்டிருந்தனர். அப்போது எதிரே இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது. தென் சங்கம்பாளையம் பகுதியில் எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் புளியங்கண்டியை சேர்ந்த ரமேஷ் (19), சஞ்சய் (16), சோமந்துரை சித்தூரை சேர்ந்த சிவக்குமார்(45) உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மாணவன் தினேஷ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஈரோட்டில் தலைக்கேறிய போதையில் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்; போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோட்டூர் காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசையாக பிரியாணி கேட்ட தொழிலாளி; கூலாக பூரான் பிரியாணியை பார்சல் செய்த ஓட்டல் நிர்வாகம்