கோவையில் திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்; வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

By Velmurugan s  |  First Published Aug 28, 2023, 9:50 AM IST

கோவை மாவட்டத்தில் திடீரென 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய நிலையில், ரோந்து பணிகளை அதிகப்படுத்துமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளன. இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. 

Latest Videos

undefined

அவ்வாறு ஊருக்குள் வரும் வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன. இந்நிலையில் இரவு தடாகம் சாலை காளையனூரில் இரண்டு காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து உலா சென்றுள்ளது. பின்னர் அங்குள்ள தனியார் வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள், வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளன. 

ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க ஆன்லைனில் கடன்... சிக்கி கொண்ட காவலர்.! தற்கொலை முயற்சியால் பரபரப்பு

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற வனத்துறையினர்  இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதால் வனத்துறையினர் இரவு நேர ரோந்துபணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டி - சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய தூத்துக்குடி அணி
 

click me!