கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி என இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரித்துரை மற்றும் முத்துலட்சுமி தம்பதியரின் மகன்கள் அபினேஷ் குமார் மற்றும் அவினேஷ். பள்ளி விடுமுறை என்பதால் சகோதர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள திம்மராயன்பாளையம் கிராமத்தில் உள்ள தங்களது பாட்டி லிங்கம்மாள் என்பரது வீட்டிற்கு நேற்று காலை வந்துள்ளனர்.
என் பெயரை சொல்லி மோசடியா? அதிர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்; போலீஸ் விசாரணை
பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு வந்த சிறுவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வீட்டின் அருகே உள்ள பவானியாற்றில் குளித்து விளையாடச் சென்றுள்ளனர். சகோதர்கள் இருவரும் குளித்து கொண்டிருந்த போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை சிறுவர்கள் குளித்த இடத்தின் அருகே துணி துவைத்து கொண்டிருந்தவர்கள் பார்த்து விட்டு கூக்குரலிட்டபடி ஓடி சென்று சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
வீட்டில் மது விற்றதை தட்டி கேட்ட நபர்; ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அடித்தே கொன்ற அவலம்
ஆனால் அவர்களால் சிறுவர்களை மீட்க முடியவில்லை. இதனையடுத்து ஊர் மக்கள் நீருக்கடியில் மூழ்கி கிடந்த சிறுவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை சோதித்த போது இருவரும் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவர்களின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆற்றில் மூழ்கி சகோதர்கள் பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.