கோவையில் 12 வயது பெண் குழந்தை மாயம்; 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர விசாரணை

Published : May 18, 2023, 12:27 PM IST
கோவையில் 12 வயது பெண் குழந்தை மாயம்; 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர விசாரணை

சுருக்கம்

கோவை மாவட்டம் ஒண்டிப்புத்தூரில் 12 வயது பெண் குழந்தை மாயமான நிலையில் இரண்டு தனி படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது மகள் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி. இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். 

இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அவர்  ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்தில் ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது அவர் எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை. 

பெண் கேட்டு தரமறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்; விழுப்புரத்தில் பரபரப்பு

மேலும் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், அதற்கு (மருந்து) ஊசி எடுத்துக் கொண்டு உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து; 2 வயது குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?