கோவை காரமடை பகுதியில் கொத்து கொத்தாக படையெடுக்கும் ஆப்பிரிக்க நத்தைகளால் மக்கள் அச்சம்

Published : May 18, 2023, 12:18 PM IST
கோவை காரமடை பகுதியில் கொத்து கொத்தாக படையெடுக்கும் ஆப்பிரிக்க நத்தைகளால் மக்கள் அச்சம்

சுருக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை பகுதியில் கொத்து கொத்தாக படை எடுக்கும் ஆப்பிரிக்க நத்தைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பரவலாக கோடை மழை பெய்தது. மழையின் காரணமாக காரமடை நகராட்சிக்கு உட்பட்ட குந்தா காலனி, அண்ணா நகர், ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கொத்து கொத்தாக ஆப்பிரிக்க நத்தைகள் படையெடுத்து வருகிறது.

அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக ஊர்ந்து செல்கிறது. தற்போது கோடைமழையினால்  200 முதல் 900 முட்டைகள் இட்டு இனப் பெருக்கம் செய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக பரப்பிலான வேளாண் பயிர்கள் மற்றும்  இலை, தழைகளையும் உட்கொண்டு வருகிறது. சுண்ணாம்புச் சத்துக்காக கான்கிரீட்டில் உள்ள சில பகுதிகளையும் உட்கோண்டு செரிக்கும் திறனையும் இந்த நத்தைகள் கொண்டுள்ளன.

பெண் கேட்டு தரமறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்; விழுப்புரத்தில் பரபரப்பு

இந்த ஆப்பிரிக்க நத்தைகள் விவசாயிகள் கேரள மாநிலத்தில் இருந்து தென்னங்கன்றுகளை வாங்கி வரும் போது அதிலிருந்து வந்திருக்கலாம் என ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். இந்த வகையான நத்தையை ஆராய்ந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?