கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்… தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது!!

By Narendran SFirst Published Nov 22, 2022, 8:28 PM IST
Highlights

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து சுமார் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து சுமார் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! பயங்கரவாதி வாட்ஸ் அப் Dp-யாக கோவை ஆதியோகி சிலை.?

அதன் அடிப்படையில் ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணிகளில் சிலர் மலக்குடல், உள்ளாடைகள், கால்சட்டை பாக்கேட்டுக்கள் உள்ளிட்டவற்றில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: அந்தரங்க உறுப்பில் பிளேடால் பெயரை எழுத சொல்லி டார்ச்சர்... பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது!!

மேலும் தங்கத்தை மறைந்து கொண்டுவந்த சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார், கடலூரை சேர்ந்த ஷங்கர், பரமக்குடியைச் சேர்ந்த ராம் பிரபு, சேலத்தைச் சேர்ந்த குமரவேல் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்புடையது என்றும் 12 கிலோ இருக்கும் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!