கோவையில் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பலமையான தூரி பாலம்

By Velmurugan s  |  First Published Jun 21, 2023, 4:55 PM IST

கோவையில் நூறு ஆண்டுகள் பழமையான தூரி பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவித்து அதனை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதியில் ஆறு சென்றது. இதனையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1925ம் ஆண்டு தூண்களே இல்லாமல் மேல்நோக்கி விசையின் மூலம் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது. 

99 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த பாலம்  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்  கல்லாறு பகுதியில் தூரிப்பாலத்திற்கு அருகே   கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் மாற்று பாலம் கட்டப்பட்டது. அதன்பின் அப்பகுதியில்  தூரிப்பாலம் தனது பயன்பாட்டினை முடித்து கொண்டது. இருப்பினும் 100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது. 

Latest Videos

ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்

மேலும், இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. எனவே பழமை வாய்ந்த அங்கிலேய கட்டிட தொழில்நுட்ப அடையாளமான இந்த பாலத்தை நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள்  வலியுறுத்தினர்.

இதனையடுத்து ஓடந்துறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூரிப்பாலத்தை தனியார் நிறுவன பங்களிப்புடன் புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு அதனை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக  கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் இன்று துவக்கி வைத்தார்.

ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்; போஸ்டர் ஒட்டி திமுக நிர்வாகி மிரட்டல்

நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம், போட்டோ சூட் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!