ஈராக் நாட்டில் ராமர் சிற்பம்… - புதிய தகவல்

By manimegalai aFirst Published Jun 27, 2019, 11:48 AM IST
Highlights

ஈராக்கில் உள்ள ஒரு மலையில், இந்து கடவுளான ராமர் உருவம் பொறிக்கப்பட்ட சிற்பத்தை, இந்தியக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஈராக்கில் உள்ள ஒரு மலையில், இந்து கடவுளான ராமர் உருவம் பொறிக்கப்பட்ட சிற்பத்தை, இந்தியக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 3745 கிமீ தூரம் மத்திய கிழக்கு பகுதியில் ஈராக் நாடு அமைந்துள்ளது. இங்குள்ள ஹோரன் ஷேகான் பகுதியில் தர்மான்டி - ஐ - பெலுலா மலையியில் இந்து கடவுள் ராமரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக 'அயோத்தி ஷோத் சன்ஸ்தான்' என்ற உத்தர பிரதேச மாநில அரசின் கலாச்சார ஆய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அமைப்பின் முயற்சியால் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் ஒரு சிறப்பு குழு ஈராக் சென்றது. ஈராக்கில் உள்ள இந்திய தூதர் பிரதீப் சிங் ராஜ்புரோஹித் எப்ரில், தூதரகத்தின் இந்திய அதிகாரி சந்திரமவுலி கரண் சுலைமானியா பல்கலை வரலாற்று ஆய்வாளர் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியின் கவர்னர் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு செய்தனர்.

அப்போது, மலை உச்சியில் ஒரு உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் அம்பு மற்றொரு கையில் வாள் முதுகில் அம்புகள் உள்ள அம்பாரியுடன் அந்த உருவம் உள்ளது. அருகில் காலடியில் ஒருவர் குனிந்து இருப்பது போல் உள்ளது.

அந்த சிற்பம் ராமர் மற்றும் அனுமன் என அயோத்யா ஷோத் சன்ஸ்தான் அமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் இதை ஈராக்கின் தொல்லியல் துறை மறுத்துள்ளது. அந்த சிற்பத்தில் உள்ளவர் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின தலைவர் என்றும் போரில் வென்ற அவரை வீரர் ஒருவர் வணங்குகிறார் என தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அயோத்யா ஷோத் சன்ஸ்தான் நிர்வாகிகள் கூறியதாவது: இந்த கற்சிற்பம் ராமர் மற்றும் அனுமன் என்பதை உறுதிபடுத்துவதாக இருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்யவேண்டும். அப்போது தான் நமது நாட்டின் பாரம்பரியம் வரலாற்று உண்மைகள் வெளிவரும்.

இந்த ஆய்வின் மூலம் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் மற்றும் மெசபடோமியா நாகரிகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்தும் தெரிய வரலாம். கிமு 4500 முதல் கிமு 1900 வரை மெசபடோமியா பகுதியை சுமேரியன்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன் தொடர்புடையவர்கள். அதிலும் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கான ஆதாரமாக இந்த மலை கற்சிற்பம் இருக்கிறது என்றனர்.

click me!